'ஆர்.ஆர்.ஆர்' டீஸரில் முன்னரே பயன்படுத்தப்பட்ட ஆவணக் காட்சிகளா? - நெட்டிசன்கள் கிண்டல்

By செய்திப்பிரிவு

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள 'இரத்தம் ரணம் ரெளத்திரம்' (ஆர் ஆர் ஆர்) திரைப்படத்தின் சமீபத்திய டீஸரில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஆவணக் காட்சிகள் இருப்பதாக ரசிகர்கள் சிலர் கிண்டல் செய்து வருகின்றனர்.

'பாகுபலி' படத்துக்குப் பிறகு ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

'பாகுபலி' படத்தைப் போலவே இந்தப் படமும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது. சமீபத்தில், ஜூனியர் என் டி ஆர் நடிக்கும் கோமரம் பீம் கதாபாத்திரத்தின் டீஸர் வெளியானது. ஆனால் இந்த டீஸரில் சில காட்சிகள் இணையத்தில் ஏற்கனவே கிடைக்கும் சில ஆவணக் காட்சிகள் என்று அறிந்த சிலர் அந்த அசல் காட்சிகளயும், டீஸரில் இருக்கும் காட்சிகளையும் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து, ஒப்பிட்டு கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

ஆவணக் காட்சிகளை(stock footage) முறையாக விற்பதற்கென்றே பல இணையதளங்கள் உள்ளன. கதைக்குத் தேவைப்படும் சில காட்சிகளை எடுக்கமுடியாத நிலையில், ஆவணக் காட்சிகளை வாங்கி படத்திலோ, ட்ரெய்லர், டீஸரிலோ பயன்படுத்தும் வழக்கம் ஹாலிவுட்டில் பல காலமாக இருந்து வருகிறது. கரோனா நெருக்கடி காரணமாக பல மாதங்கள் படப்பிடிப்பு தடைபட்டு அண்மையில் தான் ஆர் ஆர் ஆர் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. எனவே சில காட்சிகளை திட்டமிட்டபடி எடுத்திருக்க முடியாது. இதனால் தான் ராஜமௌலி டீஸரில் ஆவணக் காட்சிகளைப் பயன்படுத்தியிருப்பார் என்று கூறப்படுகிறது.

இன்னொரு பக்கம், இவ்வளவு நாட்கள் படப்பிடிப்பு முடிந்தும் கூட டீஸருக்குத் தேவையான காட்சிகள் இல்லையா என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்