ராஜசேகர், குடும்பத்தினருக்குக் கரோனா தொற்று

By செய்திப்பிரிவு

நடிகர் ராஜசேகர், அவரது குடும்பத்தினருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கரோனா அச்சுறுத்தல் தொடங்கியவுடன் பிரபலங்கள் பலரும் தங்களுடன் சமூக வலைதளத்தில் விழிப்புணர்வு செய்தார்கள். ஆனால், அனைத்தையும் தாண்டி பல்வேறு பிரபலங்களுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டு, அதிலிருந்து மீண்டு வருகிறார்கள்.

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், தமன்னா, அர்ஜுன் கபூர், மலைகா அரோரா, ஜெனிலியா, ராஜமெளலி உள்ளிட்ட பலருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான ராஜசேகர், அவரது குடும்பத்தினருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனை உறுதி செய்யும் விதமாக ராஜசேகர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"ஜீவிதா, குழந்தைகள் மற்றும் எனக்கு என அனைவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வந்த செய்தி உண்மைதான். தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறோம். இரண்டு குழந்தைகளும் பூரண குணமடைந்துவிட்டனர். நானும் ஜீவிதாவும் நன்றாகத் தேறியுள்ளோம். விரைவில் வீடு திரும்புவோம். நன்றி".

இவ்வாறு ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

31 mins ago

சினிமா

45 mins ago

சினிமா

53 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்