ஓடிடி தளத்தில் 'நிசப்தம்' படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் உருவான படம் ‘சைலன்ஸ்’. மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் தமிழ் - தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவானது. தமிழில் இந்தப் படத்துக்கு 'நிசப்தம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
கோனா வெங்கட் மற்றும் விஸ்வ பிரசாத் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். சஸ்பென்ஸ் த்ரில்லரான இந்தப் படம், வசனமே இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பணிகள் அனைத்தும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாரானது. கரோனா ஊரடங்கினால் இந்தப் படத்தின் வெளியீடு பாதிக்கப்பட்டது.
ஓடிடி தளத்தில் வெளியாகுமா, ஆகாதா என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. இறுதியாக, சில தினங்களுக்கு முன்பு ஓடிடி வெளியீட்டை உறுதிப்படுத்தியது 'நிசப்தம்' படக்குழு. தற்போது இந்தப் படம் அக்டோபர் 2-ம் தேதி வெளியாகும் என்று அமேசான் ப்ரைம் அறிவித்துள்ளது.
நானி நடிப்பில் வெளியான 'வி' படத்தைத் தொடர்ந்து, ஓடிடி தளத்தில் வெளியாகும் மற்றொரு எதிர்பார்ப்புக்குரிய படம் 'நிசப்தம்' என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
9 mins ago
சினிமா
15 mins ago
சினிமா
23 mins ago
சினிமா
36 mins ago
சினிமா
44 mins ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago