'ஆர்.எக்ஸ் 100' இயக்குநர் அஜய் பூபதி இயக்கவுள்ள புதிய படத்தில் சர்வானந்துடன் நடிக்க சித்தார்த் ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் கவனம் செலுத்தி வருபவர் சித்தார்த். 2013-ம் ஆண்டு தெலுங்கில் 'ஜபர்தஸ்த்' படத்தைத் தொடர்ந்து வேறு எந்தவொரு தெலுங்குப் படத்திலும் நடிக்காமல் இருந்தார் சித்தார்த். தமிழில் உருவான 'அவள்' திரைப்படம், தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்றது.
தற்போது நேரடித் தெலுங்கப் படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளார் சித்தார்த். 'ஆர்.எக்ஸ்.100' இயக்குநர் அஜய் பூபதி இயக்கவுள்ள புதிய படத்தில் சர்வானந்த் நாயகனாக நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சித்தார்த்.
'மஹா சமுத்திரம்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஏ.கே எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்தப் படம் உருவாகவுள்ளது.
» என்னுடைய பணியிடம் ஒரு பிணவறையாக மாற்றப்பட்டுவிட்டது: கங்கணா ஆதங்கம்
» கரோனா விதிமுறைகளை மீறியதாக நடிகர் அல்லு அர்ஜுன் மீது புகார்
காதல் கலந்த ஆக்ஷன் கதையாக உருவாகும் இந்தப் படத்தில் இன்னும் சிலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாகவும், இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
13 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago