கரோனா வைரஸ் பரவல் காரணமாக புதிய திரைப்படங்களுக்கான படப்படிப்பை நடத்த முடியாமல் திரையுலகமே ஸ்தம்பித்துள்ளது. இந்நிலையில், கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி படப்பிடிப்புகளை நடத்த ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில முதல்வர்கள் அனுமதி வழங்கினர்.
இந்நிலையில், தெலுங்கு திரையுலகின் இளம் நட்சத்திரமான அல்லு அர்ஜுன் தற்போது ‘புஷ்பா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படப்பிடிப்புக்கான இடத்தைப் பார்க்க இந்த படக்குழுவினர் சமீபத்தில் தெலங்கானா மாநிலம், ஆதிலாபாத் மாவட்டத்தில் உள்ள ‘குண்டால’ நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சென்றனர். இதில் நடிகர் அல்லு அர்ஜுனும் கலந்து கொண்டார். பின்னர், இதுபற்றிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டார். இதையடுத்து, கரோனா விதிமுறைகளை மீறி படப்பிடிப்பு நடத்தச் சென்றதால் இந்த படக்குழுவினர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் ஆதிலாபாத் நேரேட்டிகுண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி, அதன் பின்னர் வழக்கு பதிவு செய்வதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago