விக்ரம் கே.குமார் இயக்கத்தில் நாக சைத்தன்யா நடிக்கவுள்ள புதிய படத்தில் ப்ரியா பவானி சங்கரை நாயகியாக நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
'மனம்', '24' உள்ளிட்ட வரவேற்பு பெற்ற படங்களை இயக்கியவர் விக்ரம் குமார். கடந்தாண்டு தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான 'கேங் லீடர்' படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
'கேங் லீடர்' படத்துக்குப் பிறகு விக்ரம் கே.குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நாக சைத்தன்யா நாயகனாக நடிக்கவுள்ளார். தில் ராஜு தயாரிக்கவுள்ள இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு, நாகார்ஜுனா பிறந்த நாளன்று வெளியிடப்பட்டது.
'தேங்க் யூ' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் இரண்டு நாயகிகள் நடிக்கவுள்ளனர். இதில் ஒரு நாயகிக்கு ப்ரியா பவானி சங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. இன்னொரு நாயகியாக ரகுல் ப்ரீத் சிங்கை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.
» கங்கணாவின் போராட்டம் மகாபாரதத்தில் கிருஷ்ணரின் யுத்தத்தைப் போன்றது: தந்தை அமர்தீப் கருத்து
» தொழிலதிபர் அஷ்வின் ஃபிலிப் - மியா ஜார்ஜ் திருமணம்: பிரபலங்கள் வாழ்த்து
ரகுல் ப்ரீத் சிங் - ப்ரியா பவானி சங்கர் இருவருமே நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டால், இருவரும் இணைந்து நடிக்கும் இரண்டாவது படமாக 'தேங்க் யூ' இருக்கும். ஏனென்றால் இருவருமே ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago