டொவினோ தாமஸ் நடிக்கும் ‘மின்னல் முரளி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

By செய்திப்பிரிவு

பாசில் ஜோசப் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடிக்கும் ‘மின்னல் முரளி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

‘மாயநதி’, ‘ஃபாரன்ஸீக்’, ‘தீவண்டி’, ‘வைரஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் டொவினோ தாமஸ். நிவின் பாலி, துல்கர் சல்மான் வரிசையில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றவர். ‘மாரி 2’ படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடித்துள்ளார்.

இந்நிலையில் ‘குஞ்சிராமாயணம்’, ‘கோதா’ ஆகிய படங்களை இயக்கிய பாசில் ஜோசப் இயக்கும் அடுத்த படமான ‘மின்னல் முரளி’ படத்தில் டொவினோ தாமஸ் நடித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (26.08.20) வெளியாகியுள்ளது.

இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என ஐந்து இந்திய மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தை ‘பெங்களூர் டேஸ்’, ‘முந்திரிவல்லிகள்’, ‘தாளிர்கொம்பல்’ ஆகிய படங்களைத் தயாரித்த வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் தயாரிக்கிறது.

இப்படத்தில் ‘ஜெமினி மேன்’, ‘தி லாஸ்ட் விட்ச் ஹண்டர்’, ‘லூசிஃபர்’ ஆகிய ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய விலாட் ரிம்பர்க் சண்டைப்பயிற்சி இயக்குநராகப் பணியாற்றுகிறார். ஷான் ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்துக்கு சமீர் தாஹீர் ஒளிப்பதிவு செய்கிறார்.

வரும் ஓணம் பண்டிகை அன்று இப்படத்தின் டீஸரை வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

மேலும்