இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணமில்லை என்று நடிகர் சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சினிஷ் - சந்தீப் கிஷன் இருவரும் கூட்டுத் தயாரிப்பாக புதிய படமொன்றை அறிவித்துள்ளனர். தெலுங்கில் தயாரிக்கும் இந்தப் படத்தை ராம் அப்பாராஜூ இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று (ஆகஸ்ட் 17) வெளியிடப்பட்டது.
'விவாஹ போஜனம்பு' என்ற பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் நாயகன் யார் என்பது சஸ்பென்ஸ் என்றது படக்குழு. முழுக்க யதார்த்த வாழ்க்கையைச் சொல்லும் திருமண நகைச்சுவையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகவுள்ளது. இந்த அறிவிப்புக்காகப் படக்குழுவினருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள்.
தனக்கு வந்த வாழ்த்துகள் தொடர்பாக சந்தீப் கிஷன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேனா எனக் கேட்டுக் குறைந்தது 100 அழைப்புகள், 1000க்கும் அதிகமான குறுஞ்செய்திகள் இதுவரை வந்துவிட்டன. இதில் பெரும்பாலான அழைப்புகளின் தன்மை அதிர்ச்சியிலிருந்து சிரிப்பு வரை மாறுபட்டது வேடிக்கையாக இருந்தது. இல்லை, உடனடியாக திருமணம் செய்து கொள்ளும் எந்தத் திட்டமும் இல்லை"
இவ்வாறு சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago