கன்னடத்தில் ரீமேக் ஆகிறது கோலமாவு கோகிலா

By செய்திப்பிரிவு

தமிழில் பெரும் வரவேற்பு பெற்ற 'கோலமாவு கோகிலா' திரைப்படம் கன்னடத்தில் ரீமேக்காகவுள்ளது.

2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 17-ம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'கோலமாவு கோகிலா'. நயன்தாரா, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், ஆர்.எஸ்.சிவாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். லைகா நிறுவனம் தயாரித்த இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்திருந்தார்.

இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் இதன் ரீமேக் உரிமைக்குப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், சில நாட்களுக்குப் பிறகு எந்தவொரு தகவலுமே இல்லாமல் போனது.

தற்போது, இந்தப் படத்தின் கன்னடத்தில் ரீமேக்காக இருப்பது உறுதியாகியுள்ளது. இதில் நயன்தாரா கதாபாத்திரத்தில் ரட்சிதா ராம் நடிக்கவுள்ளார். இவர் கன்னடத்தில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார்.

'கோலமாவு கோகிலா' கன்னட ரீமேக்கை மவுரியா இயக்கவுள்ளார். லைகா நிறுவனத்திடம் இதன் ரீமேக் உரிமைக்கான இறுதிகட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில், இந்தப் பேச்சுவார்த்தை முடிந்தவுடன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'கோலமாவு கோகிலா' படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்டர்' படத்தை இயக்கி வருகிறார் நெல்சன். இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

மேலும்