சிவ ராஜ்குமார் நடிக்கவுள்ள புதிய படத்தை விஜய் மில்டன் இயக்கவுள்ளார்.
முன்னணி ஒளிப்பதிவாளரான விஜய் மில்டன் இயக்குநராக அறிமுகமான படம் 'அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது'. ஆனால், 'கோலி சோடா' படத்தின் மூலமாகவே அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். அதனைத் தொடர்ந்து '10 எண்றதுக்குள்ள', 'கடுகு', 'கோலி சோடா 2' உள்ளிட்ட படங்களை இயக்கினார்.
தற்போது கன்னடத்தில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார் விஜய் மில்டன். முன்னணி நடிகரான சிவ ராஜ்குமார் மற்றும் டாலி தனஞ்ஜெயா இணைந்து நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தின் கதையைக் கேட்டுவிட்டு உடனடியாக தேதிகள் ஒதுக்கிக் கொடுத்துள்ளார் சிவ ராஜ்குமார்.
சிவ ராஜ்குமார் - டாலி தனஞ்ஜெயா இருவரும் இணைந்து நடித்த 'டகரு' என்ற திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதற்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்கும் படம் இது என்பது நினைவுகூரத்தக்கது. இந்தப் படத்தை விஜய் மில்டனின் ரஃப் நோட் நிறுவனமும், கிருஷ்ணா கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
» அமிதாப்புக்கு கரோனா தொற்று: நலம் விசாரித்த ரஜினி
» கரோனா பணியாளர்களுக்காக 11 ஹோட்டல்களை வழங்கிய ரோஹித் ஷெட்டி: மும்பை காவல்துறை நன்றி
கதை, திரைக்கதை, இயக்கம் மட்டுமன்றி ஒளிப்பதிவையும் சேர்த்து விஜய் மில்டன் கவனிக்கவுள்ளார். அனூப் சீலின் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார்.
இன்று (ஜூலை 12) சிவ ராஜ்குமாரின் பிறந்த நாளாகும். அதனை முன்னிட்டு இந்தப் படத்தின் அறிவிப்பை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago