'வக்கீல் சாப்' படத்தின் புகைப்படம் வெளியானதால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
திரையுலகில் இருந்து அரசியல் களத்துக்குச் சென்ற பவன் கல்யாண், மீண்டும் திரையுலகிற்குத் திரும்பியுள்ளார். அவருடைய மறுவருகையின் முதல் படமாக 'பிங்க்' ரீமேக் உருவாகி வருகிறது. ஸ்ரீராம் வேணு இயக்கி வரும் இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பவன் கல்யாண்.
இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் சமயத்தில்தான் கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் இந்தப் படத்தின் பணிகள் பாதிக்கப்பட்டன.
தற்போது, இந்தப் படத்தின் இறுதிகட்டப் பணிகளின்போது பவன் கல்யாண் நீதிமன்றத்தில் வாதாடுவது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகிவிட்டது. மேலும், சின்ன வீடியோவும் வெளியானதாகவும் தெரிகிறது. இதனால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
எங்கிருந்து எப்படி வெளியானது என்ற ஆராய்ச்சியில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். பெரும் முதலீடு உள்ள படம் என்பதால் காவல்துறையினர் உதவியை நாடவும் திட்டமிட்டுள்ளனர். முன்னதாக, படப்பிடிப்பு தொடங்கிய நாளன்றே படப்பிடிப்புத் தளத்தின் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையானது. தற்போது மீண்டும் புகைப்படங்கள் லீக்காகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் பவன் கல்யாணுடன் நிவேதா தாமஸ், அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். போனி கபூர் மற்றும் தில் ராஜூ இருவரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago