மீண்டும் படப்பிடிப்புக்கு ஆயத்தமாகும் 'பிரபாஸ் 20' படக்குழு

By செய்திப்பிரிவு

மீண்டும் படப்பிடிப்புக்கு ஆயத்தமாகும் 'பிரபாஸ் 20' படக்குழுவினர், பிரம்மாண்டமான அரங்குகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ராதா கிருஷ்ணா இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் புதிய படம் தொடங்கப்பட்டது. 'சாஹோ' படத்தைத் தயாரித்த யு.வி கிரியேஷன்ஸ் நிறுவனம்தான் இந்தப் படத்தையும் தயாரித்து வருகிறது. கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டுள்ளது.

தற்போது, படப்பிடிப்புக்கு அனுமதியளித்துவிட்டாலும் பல்வேறு நாயகர்கள் கரோனா அச்சுறுத்தலால் கலந்து கொள்ளவில்லை. இதனிடையே ஆகஸ்ட் மாத படப்பிடிப்புக்காக இப்போதே ஆயத்தப் பணிகளைத் தொடங்கிவிட்டது 'பிரபாஸ் 20' படக்குழு.

இனிமேல் வெளிநாட்டுப் படப்பிடிப்பு அனுமதிக்கு நாட்களாகும் என்பதால், இங்கே அரங்குகளை உருவாக்கி வருகிறது படக்குழு. பிரம்மாண்டமான மருத்துவனை, ஐரோப்பாவின் வீதிகள், பெரிய கப்பல் உள்ளிட்ட அரங்குகள் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கப்படும் எனத் தெரிகிறது.

இந்தப் படத்தை முடித்துவிட்டு, 'மஹாநடி' படத்தின் இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் பிரபாஸ். இதனை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

38 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

மேலும்