சந்தீப் ரெட்டி வாங்கா கதையில் ரன்பீர் கபூரை நடிக்க வைக்க மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.
விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடித்து கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான படம் ‘அர்ஜுன் ரெட்டி’. சந்தீப் வாங்கா ரெட்டி இயக்கிய இந்தப் படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியால் தமிழ் மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தி ரீமேக்கை சந்தீப் ரெட்டி வாங்காவே இயக்கினார். ஷாகித் கபூர் நாயகனாக நடித்த இந்தப் படம் மாபெரும் வசூல் சாதனை புரிந்தது. இதனால், இந்தி திரையுலகில் சந்தீப் ரெட்டி வாங்காவின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இதனிடையே, 'கபீர் சிங்' படத்தைத் தொடர்ந்து மகேஷ் பாபு படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடந்தது. அந்தப் பேச்சுவார்த்தை முற்றுப் பெறவில்லை. இதனால், இந்தியில் சந்தீப் ரெட்டி வாங்காவின் அடுத்தப் படத்தில் ரன்பீர் கபூரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது.
» ‘முதலாளி’ என்று எம்ஜிஆர் அழைத்த சின்னப்பா தேவர்; பூஜையின் போதே ரிலீஸ் தேதி; திட்டமிட்ட உழைப்பாளி!
» விஜய்க்கு கலாட்டாவான இன்னொரு முகம் இருக்கிறது: மாளவிகா மோகனன்
தற்போது, அந்தப் பேச்சுவார்த்தை ஒருவழியாக படம் பண்ணும் அளவுக்கு எட்டியிருப்பதாக பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தப் படத்தை 'கபீர் சிங்' தயாரிப்பாளரே தயாரிக்கவுள்ளதாகவும், கரோனா ஊரடங்கு முடிந்தவுடன் தயாரிப்பாளர் மற்றும் ரன்பீர் கபூர் இருவருக்கும் இறுதிக்கதையை சொல்ல சந்தீப் ரெட்டி வாங்க தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago