கடந்த ஜூன் 10ஆம் தேதியன்று நந்தமுரி பாலகிருஷ்ணா தனது 60வது பிறந்தநாளை கொண்டாடினார். பிரபலங்கள் பலரும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
அதற்கு முந்தைய தினம் துவாரகா க்ரியேஷன்ஸ் யூடியூப் பக்கத்தில் பாலகிருஷ்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக போயபதி சீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது. இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை.
இப்படத்தின் டீசர் இதுவரை 79 லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. இந்த டீசரை ரசிகர்கள் ட்விட்டரில் #BB3 என்ற ஹாஷ்டேகில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இதற்கு முன்னார் போயபதி சீனு இயக்கிய ‘சிம்ஹா’, ‘லெஜண்ட்’ ஆகிய இரண்டு படங்களில் பாலகிருஷ்ணா நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களும் தெலுங்கில் பெரும் வெற்றியைப் பெற்றன.
இந்நிலையில் தற்போதும் போயபதி சீனு இயக்கத்தில் மூன்றாவது முறையாக பாலகிருஷ்ணா நடிக்கும் இப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது பாலகிருஷ்ணா நடிக்கும் 106வது படமாகும். இப்படத்தை மிர்யாலா ரவீந்தர் ரெட்டியின் துவாராகா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இப்படத்துக்கு தமன் இசையமைக்கிறார்.
இப்படம் குறித்து பாலகிருஷ்ணா கூறியுள்ளதாவது:
இது நானும் போயபதி சீனுவும் இணையும் மூன்றாவது படம். எங்கள் இருவருக்குமிடையே நல்ல புரிதல் உள்ளது. இந்த படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பொதுவாக நானும் போயபதி சீனுவும் படத்தை சீக்கிரம் முடித்து விடுவோம்.
படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கியதுமே அதை விரைவாக முடித்து ரசிகர்களுக்காக வெளியிடவுள்ளோம். இப்படத்தை பெரிய அளவில் தயாரிக்க தயாரிப்பாளர் மிர்யாலா ரவீந்தர் ரெட்டி திட்டமிட்டுள்ளார்.
எனது ரசிகர்கள் பலரும் என் பிறந்தநாள் சமூக பணிகளின் போது சமூக இடைவெளியை பின்பற்றியது மகிழ்ச்சியை தருகிறது. நான் அவர்களுக்கு மிகவும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.
இவ்வாறு பாலகிருஷ்ணா கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago