'சாஹோ' இயக்குநருக்கு திருமண நிச்சயதார்த்தம்: பிரபலங்கள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

'சாஹோ' இயக்குநருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

'ரன் ராஜா ரன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுஜித். அந்தப் படத்துக்குப் பிறகு 5 ஆண்டுகள் கழித்து பிரபாஸ் நாயகனாக நடித்த 'சாஹோ' படத்தை இயக்கினார். தமிழ், தெலுங்கு, இந்தி என பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் வசூல் ரீதியாக வரவேற்பைப் பெற்றது.

'சாஹோ' படத்தின் மூலம் சுஜித் பிரபலமானார். அவருடைய அடுத்தப் படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தது. ஆனால் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் 'லூசிஃபர்' ரீமேக்கை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் சுஜித். இது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.

இதனிடையே, இன்று (ஜூன் 11) 'சாஹோ' இயக்குநருக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. பல் மருத்துவரான பரவாலிகாவை திருமணம் செய்யவுள்ளார். கரோனா அச்சுறுத்தலால் இரண்டு குடும்பத்தினர் மட்டுமே இந்த நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

திருமண தேதி மற்றும் வரவேற்பு உள்ளிட்டவை இன்னும் முடிவாகவில்லை. விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரோனா அச்சுறுத்தலால் பிரபலங்கள் யாரும் செல்ல முடியாத காரணத்தால், பலரும் அவருக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

53 mins ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்