கரோனா தனிமைக்குப் பின் முதன்முதலாக உடற்பயிற்சி: புகைப்படத்தை வெளியிட்ட ப்ரித்விராஜ் 

By செய்திப்பிரிவு

'ஆடுஜீவிதம்' திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக, ப்ரித்விராஜ் உள்ளிட்ட 50 பேர் கொண்ட குழு சில மாதங்களுக்கு முன்பு ஜோர்டான் நாட்டுக்குச் சென்றது.

கரோனா நெருக்கடியால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் கடந்த இரண்டு மாதங்களாக அங்கேயே சிக்கியிருந்த படக்குழு, கடந்த வாரம் இந்தியா திரும்பியது. இந்தியா திரும்பிய அனைவரும், விதிமுறைகளின்படி 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்தக் கட்டாயத் தனிமைக் காலம் முடிந்து ப்ரித்விராஜ் வீடு திரும்பியுள்ளார். மலையாள சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் ப்ரித்விராஜை வரவேற்று அவருடைய சமூக வலைதளப் பக்கங்களில் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது உடற்பயிற்சிக் கூடத்தில் தான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை ப்ரித்விராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் தூக்கு, எறி, வலுப்படுத்து என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட நாட்களுக்குப் பின் ப்ரித்விராஜ் வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படம் அவரது ரசிகர்கள் பலரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதை ப்ரித்விராஜ் ரசிகர்கள் பலரும் பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

37 mins ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

மேலும்