ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'பாகுபலி'. இரண்டு பாகங்களாக வெளியான இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்துக்குப் பிறகு பிரபாஸின் மார்க்கெட் இந்திய அளவில் உயர்ந்தது. இப்படம் இந்தி, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் வெளியாகி வெற்றி பெற்றது.
முதல் பாகம் ரூ.685 கோடியும், இரண்டாம் பாகம் ரூ.1,810 கோடியும் உலகம் முழுவதும் வசூலித்து சாதனை புரிந்தன.
இந்நிலையில் இப்படத்தின் ஒளிபரப்பு உரிமையை ரஷ்ய தொலைக்காட்சி சேனல் ஒன்று கைப்பற்றியிருந்தது. அதற்காக ‘பாகுபலி 2’ திரைப்படம் ரஷ்ய மொழியில் டப்பிங் செய்யப்பட்டது.
இதை இந்தியாவுக்கான ரஷ்யத் தூதரகம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது. இதுகுறித்து ரஷ்யத் தூதரகம்
''ரஷ்யாவில் இந்தியப் படங்களுக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது. ‘பாகுபலி 2’ திரைப்படம் ரஷ்ய மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ரஷ்யத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது'' என்று பதிவிட்டுள்ளது.
» அஜய் தேவ்கன் படத்துக்காக போடப்பட்ட 16 ஏக்கர் பிரம்மாண்ட செட் பாதியில் அகற்றம்
» மாதர் சங்கத்திடம் மன்னிப்பு கோரிய 'பொன்மகள் வந்தாள்' இயக்குநர்
அதோடு ‘பாகுபலி’ படத்தின் காட்சியையும் இணைத்துள்ளது. ‘பாகுபலி 2’ திரைப்படம் ரஷ்யத் தொலைகாட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுவதற்கு ரசிகர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago