ராணா - மிஹீகா பஜான் இருவரின் திருமண நிச்சயார்த்தம் இன்று நடைபெற்றது. திருமணத் தேதி இன்னும் முடிவாகவில்லை.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராணா. இவர் பிரபலத் தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகன். இவரது தாத்தா ராமாநாயுடுவும் தெலுங்குத் திரையுலகில் மிகப்பெரிய தயாரிப்பாளர். 'பாகுபலி' திரைப்படத்தின் வில்லனாக நடித்ததன் மூலம் உலக அளவில் பிரபலமானார். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் 'காடன்' படத்தில் நடித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு தனது காதலியை அறிமுகப்படுத்தினார் ராணா. ஹைதராபாதைச் சேர்ந்த மிஹீகா பஜாஜ்தான் ராணாவின் காதலி. அவர் இன்டீரியர் டிஸைனராக உள்ளார். நிகழ்ச்சி மேலாண்மை (event management), ஆடை வடிவமைப்பு, பர்ஸ், ஹேண்ட்பேக் வடிவமைப்பு உள்ளிட்ட பணிகளை தனது நிறுவனம் மூலம் செய்து வருகிறார். ராணாவின் அறிவிப்புக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், இந்த ஆண்டுக்குள் திருமணத்தை முடிக்க ராணா - மிஹீகா பஜாஜ் குடும்பத்தினர் முடிவு செய்திருந்தனர். இதனிடையே இன்று (மே 21) காலை ராணா - மிஹீகா பஜாக் திருமண நிச்சயார்த்தம் நடைபெற்றது. இதனை ராணா தனது சமூக வலைதளப் பதிவில் உறுதி செய்துள்ளார். திருமணத் தேதி குறித்து இன்னும் அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.
» 'பொன்மகள் வந்தாள்' கதைக்களம், அனுபவம்: ஜோதிகா பேட்டி
» சம்பளத்தைக் குறைத்துக் கொண்ட நாசர்: 'கபடதாரி' தயாரிப்பாளர் நெகிழ்ச்சி
முக்கிய செய்திகள்
சினிமா
8 mins ago
சினிமா
17 mins ago
சினிமா
50 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago