உங்கள் பணியின் தரத்தைக் கண்டு பொறாமை கொண்டேன்: மோகன்லாலுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

உங்கள் பணியின் தரத்தைக் கண்டு பொறாமை கொண்டேன் என்று மோகன்லால் பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியில் கமல் குறிப்பிட்டுள்ளார்.

மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் இன்று (மே 21) தனது 60-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். மலையாளம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். இவருக்கு பல்வேறு திரையுலகினரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

'A Wednesday' படத்தின் தமிழ் ரீமேக்கான 'உன்னைப்போல் ஒருவன்' படத்தில் கமலுடன் இணைந்து நடித்திருந்தார் மோகன்லால். அதற்கு முன்பே இருவரும் நெருங்கிய நண்பர்களாக வலம் வருகிறார்கள்.

இன்று மோகன்லால் பிறந்த நாளை முன்னிட்டு, கமல் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"அன்புள்ள மோகன்லால், உங்கள் முதல் படத்திலிருந்தே உங்களை நேசிக்கிறேன். ஒவ்வொரு தருணத்திலும் உங்களை எதிர்ப்பவர்களோடு இருக்கும் உங்கள் பணியின் தரத்தைக் கண்டு பொறாமை கொண்டேன். நான் உங்களோடு சேர்ந்து பணிபுரிகையில் இன்னும் அதிகமாக உங்களை நேசித்தேன். நீடுழி வாழ்க என் இளைய சகோதரா".

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

25 mins ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்