இந்தாண்டுக்குள் ராணா - மிஹீகா பஜாஜ் இருவரது திருமணத்தையும் நடத்த குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
'லீடர்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் ராணா டகுபதி. இவர் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகன். 'பாகுபலி' படத்தின் வில்லனாக நடித்து மிகவும் பிரபலமானார். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெவ்வேறு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இவரது நடிப்பில் அடுத்த வெளியீடாக பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காடன்', தமிழ் - தெலுங்கு - இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. அவ்வப்போது ராணாவின் திருமணம் தொடர்பான வதந்திகள் வந்தக் கொண்டே இருந்தன. நேற்று (மே 13) தனது காதலியை சமூக வலைதள பக்கத்தில் அறிமுகப்படுத்தினார் ராணா.
ஹைதராபாதைச் சேர்ந்த மிஹீகா பஜாஜைத் தான் ராணா காதலித்து வருகிறார். இவர் இன்டீரியர் டிஸைனர் மற்றும் சொந்தமாக ட்யூ ட்ராப் டிஸைன் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். நிகழ்ச்சி மேலாண்மை (event management), ஆடை வடிவமைப்பு, பர்ஸ், ஹேண்ட்பேக் வடிவமைப்பு உள்ளிட்ட பணிகளை இந்த நிறுவனத்தின் மூலம் செய்து வருகிறார். பகுதி நேர மாடலாகவும் சில விளம்பரங்களில், அட்டைப் படங்களிலும் தோன்றியுள்ளார்.
» ஊரடங்கு எதிரொலி: பெரிய பட்ஜெட் பாலிவுட் படங்கள் ஸ்ட்ரீமிங்கில் வெளியீடா?
» கரோனா நெருக்கடியிலும் விஜய் டிவியின் தாராள மனது: நெகிழும் தொடர் தயாரிப்பாளர்
இருவரது திருமணம் எப்போது இருக்கும் என்று பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. ஆனால் ராணா - மிஹீகா பஜாஜ் இருவரது திருமணம் இந்தாண்டுக்குள் நடைபெறும் என ராணா குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். கரோனா ஊரடங்கு முடிந்தவுடன் திருமணத் தேதியை முடிவு செய்வார்கள் எனத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago