’ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் அலியா பட் கதாபாத்திரத்தின் பின்னணி: ராஜமெளலி தகவல்

By செய்திப்பிரிவு

’ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் அலியா பட் கதாபாத்திரத்தின் பின்னணி என்ன என்பது குறித்து இயக்குநர் ராஜமெளலி தெரிவித்துள்ளார்.

'பாகுபலி' படத்தைத் தொடர்ந்து, 'இரத்தம் ரணம் ரெளத்திரம்' படத்தை இயக்கி வருகிறார் ராஜமௌலி. கரோனா முன்னெச்சரிக்கையால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஓலிவா மோரிஸ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது.

சமீபத்தில் ராம் சரண் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய கதாபாத்திரத்துடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இதற்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ராம ராஜு என்ற பெயரில் இந்தப் படத்தில் நடித்துள்ளார் ராம் சரண். பீம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஜுனியர் என்.டி.ஆர்.

இந்தப் படத்தில் இன்னும் அலியா பட் சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்னும் படமாக்கப்படவில்லை. இதனிடையே, கரோனா ஊரடங்கு சமயத்தில் 'ஆர்.ஆர்.ஆர்' படக்குழுவினர் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பின்னணி குறித்து சிறுசிறு தகவல்களாக வெளியிட்டு வருகிறார்கள்.

இதில் 'ஆர்.ஆர்.ஆர்' படத்துக்கு அலியா பட் ஒப்பந்தம் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து படக்குழுவினர் கூறியிருப்பதாவது:

"சீதா கதாபாத்திரத்துக்கு, தரக் மற்றும் சரண் என்ற இரண்டு திறமையான நடிகர்களுக்கும் ஈடுகொடுத்து நடிக்கும் ஒரு நடிகை எனக்கு தேவைப்பட்டார். இது ஒரு முக்கோண காதல் கதை இல்லையென்றாலும், சீதா அப்பாவியான, பாதிக்கப்படக்கூடிய, மீண்டெழக்கூடிய ஒரு கதாபாத்திரம். இந்த காரணத்தாலேயே நான் அலியாவைத் தேர்ந்தெடுத்தேன்"

இவ்வாறு இயக்குநர் ராஜமெளலி தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்