ரஜினியைத் தொடர்ந்து #BetheRealMan சவாலை மணிரத்னத்துக்கும் விடுத்துள்ளார் நடிகர் சிரஞ்சீவி
தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மத்தியில் #BetheRealMan சவால் என்பது பிரபலமாகி வருகிறது. இந்த ஹேஷ்டேக்கை ஏப்ரல் 19-ம் தேதி அன்று உருவாக்கினார் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா. அதில் முதலாவதாக இயக்குநர் ராஜமெளலிக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்த சவால் என்னவென்றால் மனைவிக்கு உறுதுணையாக வீட்டு வேலைகள் பார்த்து வீடியோ வெளியிட வேண்டும்.
ராஜமெளலி இந்த சவாலை ஏற்று, வீட்டு வேலைகள் செய்த வீடியோவை வெளியிட்டு ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு பரிந்துரைத்தார். இருவருமே இந்த சவாலை ஏற்று இதர நடிகர்களுக்குப் பரிந்துரைத்தார்கள். இதில் ஜூனியர் என்.டி.ஆர், சிரஞ்சீவிக்கு பரிந்துரை செய்தார்.
#BetheRealMan சவாலை ஏற்று இன்று (ஏப்ரல் 23) வீட்டு வேலைகள் செய்வது, அம்மாவுக்கு தோசை ஊற்றிக் கொடுப்பது என வீடியோ எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து இந்தச் சவாலை தனது நண்பர்களான அமைச்சர் கே.டி.ராமா ராவ் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோருக்கு விடுத்துள்ளார்.
» ஷோபனாவின் ஃபேஸ்புக் பக்கம் ஹேக்: காவல்துறையினரிடம் புகார்
» லாக்டவுனில் தனது படங்கள் ஒளிபரப்பு: அப்பாவின் ஆலோசனை நினைவு கூரும் மோகன் ராஜா
இந்தச் சவாலை அடுத்த நபர்களுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்பதால், சிரஞ்சீவி, "இதுதான் பீம் தாரக். இதுதான் இன்று நான் செய்வது. இப்போது இந்த வீடியோதான் உங்களுக்கான ஆதாரம். கே.டி.ராமா ராவ் மற்றும் என் நண்பர் ரஜினிகாந்த் ஆகியோரை நான் பரிந்துரைக்கிறேன். #BetheRealMan சவால்" என்று குறிப்பிட்டார்.
அடுத்த சில மணித்துளிகளில் இயக்குநர் மணிரத்னத்துக்கும் இந்தச் சவாலை பரிந்துரை செய்துள்ளார். இது தொடர்பாக சிரஞ்சீவி "மணி சாரை டேக் செய்ய அவருடைய பக்கத்தைத் தேடிக்கொண்டிருக்கிறேன். ஒருவழியாக அவரது மெட்ராஸ் டாக்கீஸ் பக்கத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். இப்போது நான் மணிரத்னம் சாரையும் சவாலுக்குப் பரிந்துரைக்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இந்தச் சவாலை ரஜினிகாந்த் மற்றும் மணிரத்னம் ஏற்று வீடியோ வெளியிடும் போது, இரண்டு பேரை பரிந்துரைக்க வேண்டும். அதன்மூலம் இந்தச் சவால் தமிழ்த் திரையுலகிலும் பிரபலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago