#BetheRealMan என்ற சவாலை ரஜினிக்கு விடுத்துள்ளார் சிரஞ்சீவி. இந்தச் சவாலை ஏற்பாரா ரஜினி என்பது விரைவில் தெரியவரும்.
இந்தியாவில் கரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துவிட்டது மத்திய அரசு. இதனால் பொதுமக்கள், திரையுலகப் பிரபலங்கள் என அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். பல திரையுலகப் பிரபலங்கள் வீட்டில் சமைப்பது, உடற்பயிற்சி செய்வது உள்ளிட்ட வீடியோக்களை எடுத்து தங்களுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.
இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி பலரும் ட்விட்டர் பக்கத்தில் ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி, ஒருவருக்கு ஒருவர் சவால் விடுத்து வருகிறார்கள். அதில் ஏப்ரல் 19-ம் தேதி அன்று #BeTheRealMan என்ற ஹேஷ்டேகை உருவாக்கினார் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா. அதில் முதலாவதாக இயக்குநர் ராஜமெளலிக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்த சவால் என்னவென்றால் மனைவிக்கு உறுதுணையாக வீட்டு வேலைகள் பார்த்து வீடியோ வெளியிட வேண்டும்.
ராஜமெளலி இந்த சவாலை ஏற்று, வீட்டு வேலைகள் செய்த வீடியோவை வெளியிட்டு ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு பரிந்துரைத்தார். இருவருமே இந்த சவாலை ஏற்று இதர நடிகர்களுக்குப் பரிந்துரைத்தார்கள். இதில் ஜூனியர் என்.டி.ஆர், சிரஞ்சீவிக்கு பரிந்துரை செய்தார்.
» ‘அருவி’ அதிதி பாலனின் புதிய இசை ஆல்பம் ‘ஃப்ளாஸ்’
» தீப்பெட்டி கணேசன் குழந்தைகளின் படிப்புச் செலவை ஏற்ற சினேகன்
#BetheRealMan சவாலை ஏற்று இன்று (ஏப்ரல் 23) வீட்டு வேலைகள் செய்வது, அம்மாவுக்கு தோசை ஊற்றிக் கொடுப்பது என வீடியோ எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து இந்தச் சவாலை தனது நண்பர்களான அமைச்சர் கே.டி.ராமா ராவ் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோருக்கு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக சிரஞ்சீவி வெளியிட்டுள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது:
"இதுதான் பீம் தாரக். இதுதான் இன்று நான் செய்வது. இப்போது இந்த வீடியோதான் உங்களுக்கான ஆதாரம். கே.டி.ராமா ராவ் மற்றும் என் நண்பர் ரஜினிகாந்த் ஆகியோரை நான் பரிந்துரைக்கிறேன். #BetheRealMan சவால்"
இவ்வாறு சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.
ஆரம்பக்கால கட்டத்திலிருந்து ரஜினிகாந்த் - சிரஞ்சீவி இருவருமே நெருங்கிய நண்பர்களாக வலம் வருகிறார்கள். சென்னையில் திரைப்படக் கல்லூரியில் படிக்கும் போது 'மாப்பிள்ளை', 'ராணுவ வீரன்' ஆகிய படங்களில் ரஜினியுடன் நடித்துள்ளார்.
'அர்ஜுன் ரெட்டி' இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா ஆரம்பித்த இந்த #BetheRealMan சவால் தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. தற்போது இந்தச் சவாலை ரஜினிகாந்த் ஏற்று வீடியோ வெளியிடும் போது, இரண்டு பேரை பரிந்துரைக்க வேண்டும். அதன்மூலம் இந்தச் சவால் தமிழ்த் திரையுலகிலும் பிரபலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago