ஒருவருக்கொருவர் அனைத்து விதங்களிலும் உதவிகரமாக இருப்போம்: சாய் பல்லவி

By செய்திப்பிரிவு

ஒருவருக்கொருவர் அனைத்து விதங்களிலும் உதவிகரமாக இருப்போம் என்று நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையுலகப் பிரபலங்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். மேலும், இன்று (ஏப்ரல் 14) தமிழ் மற்றும் மலையாளப் புத்தாண்டாகும்.

இதற்கு அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் உள்ளிட்ட அனைவருமே தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் மற்றும் மலையாளப் புத்தாண்டு வாழ்த்தாக நடிகை சாய் பல்லவி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

"இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். அனைவருக்கும் மலையாளப் புத்தாண்டு வாழ்த்துகள். இந்தச் சோதனையான காலத்தில் நாம் ஒருவருக்கொருவர் அனைத்து விதங்களிலும் உதவிகரமாக இருப்போம். இந்த நகரத்தைச் சுத்தமாக வைக்க உதவும் சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறை அண்ணன்கள், அக்காக்கள் ஆகியோரின் தன்னலமற்ற சேவைக்கு நாம் என்றென்றும் கடன்பட்டிருப்போம்".

இவ்வாறு சாய் பல்லவி தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

43 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்