'லூசிஃபர்' தெலுங்கு ரீமேக்: சிரஞ்சீவியை இயக்கும் 'சாஹோ' இயக்குநர்

By செய்திப்பிரிவு

'லூசிஃபர்' படத்தின் தெலுங்கு ரீமேக்கை 'சாஹோ' படத்தின் இயக்குநர் சுஜீத் இயக்குவது உறுதியாகியுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான 'லூசிஃபர்' திரைப்படம் மலையாளத் திரைப்பட உலகில் பல வசூல் சாதனைகளைப் படைத்தது. நடிகர் ப்ரித்விராஜின் இயக்கத்தில் வெளியான முதல் படம் இது. மலையாளத்தில் 200 கோடி ரூபாய் வசூலைக் குவித்த முதல் படம் 'லூசிஃபர்' என்பது கவனிக்கத்தக்கது.

இந்தப் படம் தமிழில் டப்பிங் செய்து வெளியானாலும், தெலுங்கில் வெளியாகவில்லை. இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை சிரஞ்சீவி வாங்கினார். முதலில் 'லூசிஃபர்' ரீமேக்கை விவி விநாயக் இயக்குவார் என தகவல்கள் வெளியாகின. ஆனால், அதிகாரபூர்வமாக எந்தவொரு தகவலுமே வெளியாகவில்லை.

தற்போது 'லூசிஃபர்' ரீமேக்கை 'சாஹோ' படத்தின் இயக்குநர் சுஜீத் இயக்குவது உறுதியாகி இருக்கிறது. அவருடைய இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இந்தப் பொறுப்பை சிரஞ்சீவி கொடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது தெலுங்கிற்கு ஏற்றவகையில் திரைக்கதை அமைக்கும் பணிகளை இயக்குநர் சுஜீத் மேற்கொண்டு வருகிறார். சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளார்.

கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆச்சாரியா' படத்தில் சிரஞ்சீவி நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து 'லூஃசிபர்' ரீமேக்கில் நடிக்க சிரஞ்சீவி தேதிகள் ஒதுக்கவுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

மேலும்