பிரபல கன்னட நகைச்சுவை நடிகர் புல்லட் பிரகாஷ் உடலநலக்குறைவு காரணமாக நேற்று (06.04.20) மரணமடைந்தார். அவருக்கு வயது 44.
1998ஆம் ஆண்டு வெளியான ‘ப்ரீட்சோசு டப்பா’ என்ற திரைப்படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானவர் பிரகாஷ். நீண்டகாலமாக அவர் வைத்திருந்த ராயல் என்ஃபீல்ட் புல்லட் மோட்டார் பைக்கினால் அவர் ‘புல்லட்’ பிரகாஷ் என்று அழைக்கப்படுகிறார்.
மஸ்த் மஜா மாடி, ஐத்தலக்கடி, ஆர்யன், மல்லிகார்ஜுனா உள்ளிட்ட 300க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள புல்லட் பிரகாஷ் கடந்த 2015ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். கன்னட பிக்பாஸ் இரண்டாவது சீசனிலும் கலந்து கொண்டார்.
கடந்த சில நாட்களாகவே குடல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த புல்லட் பிரகாஷ் கடந்த மார்ச் 31ஆம் தேதி பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.
» ஜேம்ஸ் பாண்ட் நடிகை மறைவு - பிரபலங்கள் இரங்கல்
» தமிழ்ப் புத்தாண்டுக்கு 'தர்பார்' ஒளிபரப்பு: சன் தொலைக்காட்சி
இந்நிலையில் நேற்று காலை உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் நேற்று மாலை புல்லட் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
புல்லட் பிரகாஷ் மறைவுக்கு கன்னட திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago