ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்து வரும் படத்துக்கு 'இரத்தம் ரணம் ரெளத்திரம்' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.
'பாகுபலி' படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க, புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்தப் படத்துக்குத் தலைப்பு இறுதி செய்யப்படாமல் 'ஆர்.ஆர்.ஆர்' என்று அழைக்கப்பட்டு வந்தது. இன்று (மார்ச் 25) தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு இந்தப் படத்தின் தலைப்பை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.
'ஆர்.ஆர்.ஆர்' என்ற பெயருக்கு ஏற்றார் போல், 'இரத்தம் ரணம் ரெளத்திரம்' என்று தலைப்பிட்டுள்ளது படக்குழு. இதனுடன் இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக இருப்பதால், பலரும் இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டருக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்தப் படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஒலிவா மோரிஸ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. இந்த ஆண்டு வெளியாவதாக இருந்த இந்தப் படம், படப்பிடிப்பு தாமதம் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு 2021-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
» 21 நாட்கள் ஊரடங்கு: பிரதமர் அறிவிப்புக்கு திரையுலகப் பிரபலங்கள் வரவேற்பு
» உங்களுக்கு அறிவில்லையா? - ஊரடங்கைப் பின்பற்றாமல் சாலையில் திரிபவர்களைச் சாடிய அக்ஷய் குமார்
சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இன்று (மார்ச் 25) வெளியிடப்பட்டுள்ள மோஷன் போஸ்டரும் அனைத்து மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago