’கே.ஜி.எஃப் 2’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

யாஷ் நடிப்பில் உருவாகி வரும் 'கே.ஜி.எஃப் 2' படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான கன்னடப் படம் 'கே.ஜி.எஃப்' . இதர மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டது. தமிழில் இந்தப் படத்தை விஷால் வெளியிட்டார். யாஷ் நாயகனாக நடித்திருந்த இந்தப் படம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு, வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

பிரஷாந்த் நீல் இயக்கிய இந்தப் படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் 2-ம் பாகம் விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். ஏனென்றால், முதல் பாகத்தின்படி கதை முடியாமல் இருந்தது.

'கே.ஜி.எஃப்' முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 2-ம் பாகத்தில் சஞ்சய் தத், ரவீனா டண்டன் ஆகிய நடிகர்களுடன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதியை உறுதிப்படுத்தியுள்ளது படக்குழு. அதன்படி அக்டோபர் 23-ம் தேதி அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பின் மூலம், ராஜமவுலி இயக்கி வரும் 'ஆர்ஆர்ஆர்' படத்துக்குப் போட்டியாக இந்தப் படம் வெளியாகவில்லை என்பது உறுதியாகிவிட்டது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்