தனுஷை முந்திச் சாதனை படைத்த மகேஷ் பாபு

By செய்திப்பிரிவு

தென்னிந்தியத் திரையுலகப் பிரபலங்களில் அதிகம் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை கொண்டவர் என்ற சாதனையை மகேஷ் பாபு பெற்றுள்ளார்.

பத்திரிகையாளர் சந்திப்பு என்பதை எல்லாம் தாண்டி, இப்போது திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்களுடைய கருத்துகளை ட்விட்டர் பக்கங்களில்தான் வெளியிட்டு வருகிறார்கள். இதில் சிரஞ்சீவி, அஜித், சிம்பு, நயன்தாரா, அனுஷ்கா உள்ளிட்ட சில திரையுலகப் பிரபலங்கள் தவிர்த்து பலருக்கும் ட்விட்டர் தளத்தில் கணக்குகள் உள்ளன.

இதில் தமிழ்த் திரையுலகில் அதிகம் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை கொண்ட நடிகர் என்ற பெருமை தனுஷுக்கு உண்டு. அவரை ட்விட்டர் தளத்தில் 8.9 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். அவர்தான் தென்னிந்திய நடிகர்களில் அதிகம் பின்தொடர்பவர்களைக் கொண்டவர் என்ற சாதனையை வைத்திருந்தார்.

இப்போது அதனை தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு முறியடித்துள்ளார். தற்போது அவரது ட்விட்டர் தளத்தைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 9 மில்லியனைத் தாண்டியுள்ளது. இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். 9 மில்லியனைத் தொட்டதற்கு, தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார் மகேஷ் பாபு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்