தணிக்கை சர்ச்சை முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, 'ட்ரான்ஸ்' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்வர் ரசீத் இயக்கி, தயாரித்துள்ள படம் 'ட்ரான்ஸ்'. ஃபகத் பாசில், நஸ்ரியா, கவுதம் மேனன், விநாயகன், செம்பியன் வினோத் ஜோஸ், திலீஸ் போத்தன், ஜுன் ஜோசப் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். போஸ்டர் வடிவமைப்பே வித்தியாசமாக இருந்ததால், இந்தப் படத்துக்கு நல்ல எதிர்ப்பு உருவாகியுள்ளது.
இதனிடையே இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து, படத்தைத் தணிக்கைக்கு அனுப்பி வைத்தனர். திருவனந்தபுரத்தில் உள்ள தணிக்கை அதிகாரிகள் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, இதில் உள்ள ஒரு காட்சிக்கு ஆட்சேபம் தெரிவித்தனர். அந்தக் காட்சியை நீக்க வேண்டும் அல்லது மங்கலாக்க வேண்டும் என்று தெரிவித்தனர். ஆனால், இதனைச் செய்ய இயக்குநர் அன்வர் ரசீத் மறுத்துவிட்டார்.
இதனால் சர்ச்சை உருவானது. இதனைத் தொடர்ந்து படத்தை மறு தணிக்கைக்காக மும்பைக்கு அனுப்பி வைத்தனர். இதனால், படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. முன்னதாக, படத்தின் வெளியீட்டுப் பணிகள் முடிவடையாத காரணத்தால் பலமுறை தள்ளிப்போனது.
தணிக்கை பிரச்சினையால் பிப்ரவரி 14-ம் தேதி வெளியீடும் சாத்தியமில்லாத சூழல் உருவானது. இறுதியாக, இந்தப் படத்தைப் பார்த்த மும்பை தணிக்கை அதிகாரிகள், படத்தில் எந்தவொரு காட்சியையுமே நீக்கச் சொல்லாமல் 'யு/ஏ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 20-ம் தேதி படம் வெளியாகும் என ஃபகத் பாசில் அறிவித்துள்ளார்.
தவறவிடாதீர்!
பாஜக ஒரு தேங்காய்மூடி கட்சி: ராதாரவி சர்ச்சைப் பேச்சு
திரைப்பட நடிகர் எனும் புகழால் ஏற்படும் ஈகோவைக் கொல்லவே நாடகங்களைத் தேடிப் பார்க்கிறேன்: நாசர்
'சைக்கோ' ஒரு படமா? 'பாரம்' தான் படம்: மிஷ்கின் கலகலப்பான பேச்சு
அநாதைகளாக்கப்படும் யானைகளுக்காக ஒரு படம்!- ‘காடன்’ இயக்குநர் பிரபுசாலமனுடன் நேர்காணல்
முக்கிய செய்திகள்
சினிமா
9 mins ago
சினிமா
13 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago