'வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்' படமே என் கடைசி காதல் படமாக இருக்கும் என்று விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.
கிராந்தி மாதவ் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்'. கே.ஏ.வல்லபா மற்றும் கே.எஸ்.ராம ராவ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் ராஷி கண்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ், கத்ரீன் தெரசா மற்றும் இஷாபெல்லா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கோபி சுந்தர் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் காதலர் தின வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியிடப்பட்டு, நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த ட்ரெய்லர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து விஜய் தேவரகொண்டா, "இதுதான் எனது கடைசி காதல் படம் என்பது எனக்குத் தெரியும். எனவே இதைத் தனித்துவமான ஒன்றாக உருவாக்க முடிவு செய்தோம். அனைத்து வகையான காதலும் நிறைந்த ’வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’ படத்தை உங்களுக்கு வழங்குகிறேன். இந்த காதலர் தினத்தன்று வெளியாகிறது” என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தின் பணிகள் முடிவுற்றதைத் தொடர்ந்து, பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார் விஜய் தேவரகொண்டா
தவறவிடாதீர்
‘மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழாவில் தளபதி பேச்சுக்காகக் காத்திருக்கிறேன்: மலையாள நடிகர் ட்வீட்
மாதவன் - அனுஷ்காவின் ‘நிசப்தம்’: ரிலீஸ் தேதி அறிவிப்பு
‘ஆதித்ய வர்மா’வில் நடித்த விக்ரம்: த்ருவ் விக்ரம் வெளியிட்ட வீடியோ
விநியோகஸ்தர்கள் நடிக்கவா வந்துள்ளனர்? - ‘தர்பார்’ நஷ்டம் குறித்து டி.ராஜேந்தர் காட்டம்
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago