மித்ரன் - கார்த்தி கூட்டணியில் இணைந்த ஜி.வி.பிரகாஷ்

By செய்திப்பிரிவு

மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ள படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

'இரும்புத்திரை' படத்தைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்த 'ஹீரோ' படத்தை இயக்கினார் மித்ரன். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும், எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

ஆனால், 'இரும்புத்திரை' படத்துக்குப் பிறகு கார்த்தி படமொன்றை இயக்க ஒப்பந்தமாகியிருந்தார் மித்ரன். இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

மித்ரனின் முந்தைய 2 படங்களுக்குமே யுவன் இசையமைத்திருந்தார். தற்போது முதன்முறையாக ஜி.வி.பிரகாஷுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்துக்காக முடி வளர்த்துள்ளார் கார்த்தி. இந்தக் கெட்டப்பிலே மித்ரன் படத்துக்கான படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளார். 'பொன்னியின் செல்வன்' படத்தை முடித்துவிட்டு, முடியைக் குறைத்தவுடன் மித்ரன் படத்தின் இன்னொரு கெட்டப்பில் படப்பிடிப்பை நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தப் படத்தில் கார்த்தியுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

தவறவிடாதீர்

குனிந்து பழக்கப்பட்டவர்கள்; காலணியைக் கழட்டக் குனிய முடியவில்லையா? - ஸ்ரீப்ரியா சாடல்

சந்தானம் - கண்ணன் இணையும் பிஸ்கோத்

அமைதியாக இருங்கள்; எதையும் பரப்ப வேண்டாம்: காயத்ரி ரகுராம் வேண்டுகோள்

'மாநாடு' படப்பிடிப்புத் தேதி அறிவிப்பு

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்