'அசுரன்' ரீமேக்: மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் ப்ரியாமணி?

By செய்திப்பிரிவு

'அசுரன்' தெலுங்கு ரீமேக்கில் மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் ப்ரியாமணியை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 4-ம் தேதி ரிலீஸான படம் ‘அசுரன்’. தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டிஜே அருணாச்சலம், பசுபதி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தாணு தயாரித்த இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்தார்.

பிரம்மாண்ட வெற்றியால் இந்தப் படத்தின் ரீமேக் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. முதலாவதாக இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கை சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. இதில் தனுஷ் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்கவுள்ளதாகவும் அறிவித்தது.

தாணு மற்றும் டி.சுரேஷ் பாபு இணைந்து தயாரிக்க, ஸ்ரீகாந்த் அட்டலா இயக்கவுள்ளார். இதில் மஞ்சு வாரியார் கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா, ஸ்ரேயா சரண் எனப் பலரையும் அணுகினார்கள். ஆனால், யாருமே சம்மதம் தெரிவிக்காத நிலையில் தற்போது ப்ரியாமணியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு.

ப்ரியாமணியும் இதில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருவதால், விரைவில் 'அசுரன்' தெலுங்கு ரீமேக் நாயகியாக ஒப்பந்தமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்