எதிர்பார்ப்புக்குரிய 'கே.ஜி.எஃப் 2' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

பல்வேறு மொழிகளில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாகியிருக்கும் 'கே.ஜி.எஃப் 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

கன்னட மொழிப் படமான 'கே.ஜி.எஃப்', தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு, கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. பிரஷாந்த் நீல் இயக்கிய இந்தப் படத்தில் யாஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப் படமும் விமர்சனரீதியாகவும், வசூல்ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து இதன் 2-ம் பாகத்துக்குரிய எதிர்பார்ப்பு அதிகமானது. இதில் வில்லனாக சஞ்சய் தத் ஒப்பந்தம் செய்யப்பட்டு, படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பைத் தீவிரமாக நடத்தி வருகிறது படக்குழு.

தற்போது 'கே.ஜி.எஃப் 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு. 'ஒரு சாம்ராஜ்ஜியத்தை மறுகட்டமைக்கும்போது' என்ற வாசகத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் 'சலாம் ராக்கி பாய்' என்று பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE