விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்துக்கு ‘வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
‘அர்ஜுன் ரெட்டி’ தெலுங்குப் படத்தின் மூலம் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. இந்தியில் ‘கபிர் சிங்’ என்றும், தமிழில் ‘ஆதித்யா வர்மா’ என்றும் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தெலுங்குப் படங்களில் நடித்து வந்தவர், ‘நோட்டா’ படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார்.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடைசியாக வெளியான ‘டியர் காம்ரேட்’ தெலுங்குப் படம், தமிழ், மலையாளம் மற்றும் கன்னடத்திலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. ராஷ்மிகா மண்டன்னா ஹீரோயினாக நடித்த இந்தப் படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதன் இந்தி ரீமேக் உரிமையை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் வாங்கியுள்ளார்.
‘டியர் காம்ரேட்’, கடந்த ஜூலை மாதம் வெளியானது. இந்தப் படத்துக்குப் பிறகு விஜய் தேவரகொண்டா எந்தப் படத்தில் நடிக்கப் போகிறார் என ரசிகர்கள் மட்டுமின்றி, சினிமாத்துறையினரிடமும் எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில், சமீபத்தில் அவருடைய புதுப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை, க்ரந்தி மாதவ் கதை, வசனம் எழுதி இயக்குகிறார். க்ரியேட்டிவ் கமர்சியல்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
விஜய் தேவரகொண்டா ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கண்ணா, கேத்ரின் தெரேசா மற்றும் இசபெல் லெய்ட்டி என 4 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். ரொமான்டிக் படமாக இது உருவாகிறது.
இதன் ஃபர்ஸ்ட் லுக், நாளை (செப்டம்பர் 20) மாலை 5 மணிக்கு வெளியாகிறது.
என் வாழ்க்கையை மாற்றிய படம்: பிரியதர்ஷினி ராஜ்குமார்
முக்கிய செய்திகள்
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago