நேபாள பூகம்பத்தில் தப்பி சாலை விபத்தில் தெலுங்கு நடன இயக்குநர் பலியான பரிதாபம்

By செய்திப்பிரிவு

நேபாளத்தில் படப்பிடிப்புக்காக சென்றிருந்த நடன இயக்குநர் ஒருவர் விபத்தில் மரணமடைந்துள்ளார். பூகம்ப ஆபத்திலிருந்து தப்பி நிலையில் சாலை விபத்தில் அவரை இழந்தது, தெலுங்கு படக் குழுவுக்குப் பெரும் துயரத்தில் ஆழ்த்தியது.

’எடகாரம்.காம்’ என்ற தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு நேபாளத்தில் திட்டமிடப்பட்டிருந்தது. நேபாளத்தில் கோக்ரா என்ற பகுதியில் நான்கு நாள் படப்பிடிப்புக்குப் பின் காத்மண்டுவிற்கு படக்குழு காரில் திரும்பியது. அப்போது விபத்து ஏற்பட்டுள்ளது. ஒட்டு மொத்த படக்குழுவும் ஹைதராபாதிலிருந்து இரண்டு கார்களில் நேபாளம் வரை சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

படக்குழுவைச் சேர்ந்த மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். நடன இயக்குநர் விஜய் மட்டும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுபற்றி பேசிய படத்தின் மூன்றாவது நாயகன் மஹரிஷி, "என்னுடைய காட்சிகள் படம் பிடிக்கவில்லை என்பதால் நான் நேபாளம் செல்லவில்லை. காலை 3 மணியளவில் எனக்கு தொலைப்பேசி அழைப்பு வந்தது. விபத்து குறித்து கேட்டபோது என்னால் நம்பமுடியவில்லை. விஜய், இந்த படத்தின் தயாரிப்பாளர் கிஷனின் உறவினர். அவரது மகனைப் போல. நாங்கள் உடைந்து போயுள்ளோம்" என்றார்.

படத்தின் மற்றொரு நாயகனான தினேஷ், நேபாளம் சென்று விஜய்யின் உடலை எடுத்து வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவுள்ளார். காத்மாண்டுவில் ஒரு பள்ளத்தாக்கின் அருகே படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது பூகம்பம் வந்தது. படப்பிடிப்பு உடனடியாக ரத்து செய்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை தொடரலாம் என திட்டமிட்டிருந்தனர்.

சாலையோரம் வாழ்ந்து நடன இயக்குநர் ஆன விஜய்

குண்டூர் மாவட்டம் பாபட்லாவைச் சேர்ந்த விஜய்யும், அவரது குடும்பத்தினரும் முதலில் சாலையோரம் வாழ்ந்து வந்துள்ளனர். 4 பேர்களில் இளையவரான விஜய், நடனத்தில் ஆர்வம் காண்பித்துள்ளார். இதைக் கண்ட அவரது மாமா ஒருவர் தெலுங்கு சினிமா இயக்குநர்கள் சிலரிடம் அவரை அறிமுகம் செய்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE