சந்தீப் வங்கா கருத்தால் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பான ரசிகரின் கேள்விக்கு சமந்தா பதிலடி கொடுத்துள்ளார்.
தெலுங்கில் பெரும் வரவேற்பு பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படம், இந்தியில் 'கபிர் சிங்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. ஷாகித் கபூர், கியாரா அத்வானி, அர்ஜான் பாஜ்வா, நிகிதா தத்தா உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்தை, 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கினார்.
ஜூன் 21-ம் தேதி வெளியான இந்தப் படத்தில் நாயகன் பேசும் வசனங்கள், பெண்கள் காட்டப்பட்ட விதம் குறித்து பெண்ணியவாதிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். ஆனால், படமோ பெரும் வெற்றி பெற்றுள்ளது.
இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அளித்த பேட்டியால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் சந்தீப் வங்கா. அதில் சந்தீப் வங்கா கூறிய பதில்களுக்கு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'Deeply Disturbing' என்று பதிவிட்டார் சமந்தா.
இதனைத் தொடர்ந்து ரசிகர் ஒருவர் 'அர்ஜுன் ரெட்டி' வெளியானபோது, அந்தப் படத்தைப் பாராட்டி சமந்தா வெளியிட்ட ட்வீட்டையும், தற்போது சமந்தா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டோரியையும் ஒன்றாக்கி 'ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?' என்று கேள்வி எழுப்பினார்.
அவருக்குப் பதிலளிக்கும் விதமாக, “ஒரு படத்தை ரசிப்பதும், ஒரு கருத்தை மறுப்பதும் இரண்டு வெவ்வேறு விஷயங்கள். அர்ஜுன் ரெட்டி என்ற நபரின் கதை எனக்குப் பிடித்தது. ஆனால், காதல் என்றால் ஒருவரை ஒருவர் அறைந்து கொள்ளும் சுதந்திரம் இருக்க வேண்டும் என்று பொதுப்படையாக சொல்லப்படும் கருத்து எனக்குப் பிடிக்கவில்லை” என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் சமந்தா.
தற்போது சமந்தா நடித்துள்ள படங்களின் சில காட்சிகளை எடுத்து, 'இதற்கு ஏன் நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?' என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இவை எதற்குமே சமந்தா பதிலளிக்கவில்லை.
முக்கிய செய்திகள்
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago