நடிகை கடத்தல் வழக்கு: காவ்யா மாதவனிடம் விசாரணை

By செய்திப்பிரிவு

நடிகை கடத்தல் வழக்கில் மலையாள திரையுலகின் முன்னணி நடிகை காவ்யா மாதவனிடம் அந்த மாநில போலீஸார் நேற்று 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

கடந்த பிப்ரவரி 17-ம் தேதி படப்பிடிப்பு முடிந்து காரில் வீடு திரும்பி கொண்டிருந்த பிரபல நடிகையை கொச்சி அருகே ஒரு கும்பல் கடத்தியது. அவரை சுமார் 4 மணி நேரம் பாலியல்ரீதியாக துன்புறுத்திய அந்த கும்பல், அதனை வீடியோவில் பதிவு செய்தது.

இந்த சம்பவம் தொடர்பாக பல்சர் சுனில், நடிகையின் ஓட்டுநர் மார்ட்டின் அந்தோனி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக நடிகர் திலீப் கடந்த 10-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரது உத்தரவின்பேரிலேயே நடிகை கடத்தப்பட்டதாக போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.

வழக்கின் முக்கிய குற்ற வாளி பல்சர் சுனில் போலீஸில் அளித்துள்ள வாக்குமூலத்தில் நடிகர் திலீபின் மனைவியான நடிகை காவ்யா மாதவனின் ஆடை நிறுவனத்தில், கடத்தப்பட்ட நடிகையின் வீடியோ பதிவுகள் அடங்கிய மெமரி கார்டை அளித்ததாக தெரிவித்திருந்தான்.

அதன்பேரில் கடந்த ஜூன் 30-ம் தேதி காக்கநாட்டில் உள்ள காவ்யா மாதவனின் ஆடை நிறுவனத்தில் போலீஸார் சோதனை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து ஆலுவாவில் உள்ள திலீபின் வீட்டுக்கு நேற்று சென்ற தனிப் படை போலீஸார் நடிகை காவ்யா மாதவனிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை யில் முக்கிய தகவல்கள் கிடைத்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

மேலும்