போதைப்பொருள் சிக்கிய விவகாரத்தில் தெலுங்கு திரை யுலகம் சிக்கி தவித்து வருகிறது.
தெலங்கானா மாநில தலைநகரம் ஹைதராபாத். மதக்கலவரம், தீவிரவாத சதி ஆகியவையும் இங்கு அரங்கேறி உள்ளன. ஹைதராபாத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் ஐஎஸ் தீவிரவாதி களுடன் ரகசிய தொடர்பு வைத் திருந்தது சமீபத்தில் தெரியவந்தது. இதனால் ஹைதராபாத்தில் 24 மணி நேரமும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஹைதராபாத் பள்ளி மாணவர்கள் போதைப் பொருள் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கலால் துறை நடத்திய ஆய்வில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. போதைப் பொருள் பயன்படுத்தியவர்களில் பெரும்பாலானவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பிரபல தொழிலதிபர்கள் உள்ளிட்டோரின் மகன்கள் என தெரியவந்தது.
அவர்கள் கூறிய தகவலின்படி போதைப்பொருள் விற்கும் கும்பலை ஹைதராபாத் போலீஸார் மிகவும் சாமர்த்தியமாக பிடித்து கலால் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதற்கு தலைமை தாங்கிய கெல்வின், அவனது கூட்டாளிகள் 18 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த கும்பலுக்கும், தெலுங்கு திரையுலக நடிகர், நடிகைகளுக்கு தொடர்பு இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதன் அடிப்படையில் பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத், நடிகர் தருண் சுப்பராஜு, ஒளிப்பதிவாளர் ஷியாம் கே.நாயுடு, நடிகைகள் சார்மி, முமைத்கான் உட்பட 12 பேருக்கு கலால் துறை விசாரணை குழு நோட்டீஸ் அனுப்பியது. இவர்கள் அனைவரும் கடந்த 1-ம் தேதி முதல் வரும் ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி வரை விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டியுள்ளது.
இதில் முதல் நாள் ஆஜரான இயக்குநர் பூரி ஜெகன்நாத்திடம் 11 மணி நேரம் விசாரணை நடை பெற்றது. இவரது பதிலில் திருப்தி அடையாத அதிகாரிகள், இவரிடம் ரத்த பரிசோதனை, நகம், தலைமுடி பரிசோதனையும் செய்தனர். இதன் முடிவுகள் இதுவரை வெளி யிடப்படவில்லை. தேவைப்பட்டால் அடுத்த கட்டமாக இவரிடம் உண்மை அறியும் சோதனை நடத்தவும் முடிவு செயதுள்ளனர்.
இவரைத் தொடர்ந்து ஒளிப்பதி வாளர் ஷியாம் கே. நாயுடுவிடம் 5 மணி நேரமும், மறுநாள் நடிகர் சுப்பராஜுவிடம் 10 மணி நேரமும் விசாரணை நடத்தப்பட்டது. இதில் நடிகர் சுப்பராஜு, தனக்கு எந்தவித தீய பழக்கங்களும் இல்லை என்றும், ஆனால் போதைப்பொருள் உபயோகிப்பவர்கள் குறித்து தெரியும் என்றும் கூறியதாக கூறப்படுகிறது. இதன்படி மேலும் 15 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், நடிகர் தருண் நேற்று விசாரணைக்கு ஆஜரானார். இவரிடமும் பல மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இவரிடமிருந்தும் சில முக்கிய தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, கலால் துறை அதிகாரிகள் நேற்று காலையில் ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர பார் உரிமையாளர்களை அழைத்து பேசினர். அப்போது பாரில் போதைப்பொருள் உபயோகிக்க அனுமதிக்க கூடாது என்றும் மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பாக வரும் 26-ம் தேதி நடிகை சார்மியும், 27-ம் தேதி நடிகை முமைத்கானும் நேரில் ஆஜராக உள்ளனர். தற்போது தெலுங்கில் ஒளிப்பாரப்பாகி வரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் முமைத்கான் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராக முமைத்கானுக்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அனுமதி வழங்கி உள்ளனர்.
அதிகாரிக்கு மிரட்டல்
போதைப்பொருள் சிக்கிய விவகாரத்தில் கலால் துறை இயக்குநர் அகுன் குபர்வாலுக்கு 3 முறை தொலைபேசி மூலம் மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். மிரட்டல் விடுத்த நபர் வெளிநாட்டிலிருந்து (ஆப்பிரிக்க) ஆங்கிலத்தில் பேசியதாக கூறப்படுகிறது. இவர் அதிகாரியிடம் “தெலுங்கு திரையுலகத்தினரிடம் நடத்தும் விசாரணையை உடனடியாக கைவிட வேண்டும். இது உனக்கு நல்லதல்ல. உன் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடம் எனக்கு தெரியும்” என மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே விசாரணை என்ற பெயரில் தெலுங்கு திரையுலகத்தினரை ஒரு குற்றவாளி போல் நடத்துவதை பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா சமூக வலைத்தளம் மூலம் வன்மையாக கண்டித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
17 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago