ஜுனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகியிருக்கும் 'ராமய்யா ஒஸ்தாவய்யா', அவரது ரசிகர்களிக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.
ஜுனியர் என்.டி.ஆர், சமந்தா, ஸ்ருதிஹாசன் நடிப்பில், 'கபார் சிங்' இயக்குநர் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் வெளியான படம் 'ராமய்யா ஒஸ்தாவய்யா'. தில் ராஜு இப்படத்தினை பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார்.
பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம், ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. ஆந்திராவில் முதல் நாள் மட்டும் 8.7 கோடி வசூல் செய்தது தயாரிப்பாளருக்கு சந்தோஷமடைய செய்தது.
இரண்டாம் நாள் வசூல், முதல் நாள் வசூலுக்கு பாதி அளவிலேயே இருந்தது. இதனால் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார் தயாரிப்பாளர்.
முதல் பாதியில் ஜுனியர் என்.டி.ஆரின் காமெடி, நடன அசைவுகள், சமந்தாவுடன் காதல் என்று விறுவிறுப்பாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் வழக்கமான தெலுங்கு படம் போன்று குடும்ப சென்டிமென்ட், ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகள் என மிக நீளமாகவும், பெரும் ஏமாற்றமாகவும் இருந்தது.
இதற்காக படத்தின் இரண்டாம் பாதியில் 10 நிமிட காட்சிகளை நீக்கிவிட்டு திரையிட்டு இருக்கிறார்கள். ஜுனியர் என்.டி.ஆர் ரசிகர்களுக்கும் இப்படம் பெரும் ஏமாற்றத்தினை அளித்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
39 mins ago
சினிமா
54 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago