குமாரசம்பவம் மூலம் மலையாளத்தில் தமன்னா அறிமுகம்

By ஸ்கிரீனன்

ரத்தீஷ் அம்பாட் இயக்கும் 'குமாரசம்பவம்' மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமாக இருக்கிறார் தமன்னா.

தமிழ், தெலுங்கு, இந்தி என நடித்து வரும் தமன்னா, மலையாளத்தில் நல்ல கதைக்காக காத்திருந்தார். ரத்தீஷ் அம்பாட் இயக்கத்தில் உருவாகும் 'குமாரசம்பவம்' மூலம் மலையாளத்தில் அறிமுகமாக இருக்கிறார் தமன்னா.

திலீப் மற்றும் சித்தார்த் இருவரும் நாயகனாக நடிக்க இருக்கிறார்கள். சித்தார்த் நடிக்கும் முதல் மலையாள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

"விரைவில் தமன்னா இப்படத்துக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருக்கிறார். அவருக்கு மலையாளத்தில் சிறப்பான வாய்ப்பாக அமையும். மேலும், இப்படத்துக்கக சொந்த குரலில் டப்பிங் பேச வைக்கவும் முடிவு செய்திருக்கிறோம்" என்று படக்குழு தெரிவித்தது.

ரத்தீஷ் மற்றும் தமன்னா இருவருமே விளம்பர படங்களில் ஒன்றாக பணிபுரிந்து இருக்கிறார்கள். "ரத்தீஷ் இக்கதையினை தெரிவித்தவுடனே, தமன்னா இப்படத்தில் நடிக்க உடனே விருப்பம் தெரிவித்துவிட்டார்." என்றும் தெரிவித்தார்கள்.

கேரளாவில் பிரபலமான கம்யூனிச பாத்திரத்தை ஒட்டி இப்படத்தின் கதை பின்னப்பட்டு இருக்கிறது. இதன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

21 hours ago

மேலும்