ஜெயேந்திரா இயக்கத்தில் நந்தமுரி கல்யாண் ராம்

ஜெயேந்திரா இயக்கத்தில் உருவாகவுள்ள தெலுங்கு படத்தில் நந்தமுரி கல்யாண் ராம் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார்.

சித்தார்த், நித்யா மேனன், ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடிப்பில் '180' படத்தை இயக்கியவர் ஜெயேந்திரா. சரத் இசையமைத்த படத்துக்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஸ்பிஐ சினிமாஸ் தயாரித்த படத்தை ஐங்கரன் நிறுவனம் விநியோகம் செய்தது.

இப்படம் மக்களிடையே போதிய வரவேற்பை பெறவிட்டாலும், உருவாக்கம் விதத்தில் பெருமளவு பேசப்பட்டது. 2011ம் ஆண்டு வெளியான இப்படத்தைத் தொடர்ந்து ஜெயேந்திரா வேறு எந்த படத்தையும் இயக்கவில்லை.

தற்போது புதிய தெலுங்கு படமொன்றை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஜெயேந்திரா. நந்தமுரி கல்யாண் ராம் நாயகனாக நடிக்கவுள்ள படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். பி.சி.ஸ்ரீராம் - ஜெயேந்திரா இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளன. விரைவில் நாயகி மற்றும் இதர நடிகர்கள் ஒப்பந்தத்தை துரிதப்படுத்தியுள்ளது படக்குழு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE