மகேஷ்பாபு படத்தின் போஸ்டரைப் பற்றி ட்விட்டர் தளத்தில் கருத்து தெரிவித்து, சித்தார்த் - சமந்தா ஜோடி சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.
மகேஷ் பாபு, கிருத்தி சானோன் நடிக்க, சுகுமார் இயக்கத்தில் தயாராகி வரும் படம் '1 (Nenokkadine)'. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து இருக்கும் இப்படத்தின் இசை வெளியீடு நாளை (டிசம்பர் 19) நடைபெறவிருக்கிறது.
1 (Nenokkadine) படத்தின் போஸ்டர்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அப்போஸ்டரில் மகேஷ்பாபு கடற்கரையில் நடந்து வருவது போன்றும், நாயகி கிருத்தி கைகளை தரையில் ஊன்றி, முட்டிப் போட்டபடி பின் தொடர்வது போலவும் அமைந்திருந்தது.
இப்போஸ்டருக்கு சமந்தா படத்தின் பெயரைக் குறிப்பிடாமல் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில், "வெளிவராத தெலுங்கு படத்தின் போஸ்டர் ஒன்றைப் பார்த்தேன். போஸ்டரும் நல்லாயில்ல.. போஸ்டரில் சொன்ன விஷயமும் நல்லாயில்ல" என்று கூறினார்.
சமந்தாவிற்கு ஆதரவாக சித்தார்த்தும் தனது ட்விட்டர் தளத்தில் கருத்துக்களை ட்வீட்டினார். இவர்களது ட்விட்டினால், மகேஷ் பாபு ரசிகர்களை மிகவும் கோபப்படுத்தியது.
இதனால் #GetLostSamanthaAndSiddharth என்ற ட்விட்டர் டேக் ஒன்றை தயார் செய்து, இந்தியளவில் டிரெண்ட் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு போட்டியாக சமந்தாவின் ரசிகர்கள் #WeLoveSamantha என்ற டேக் ஒன்றை தயார் செய்ய அதுவும் இந்தியளவில் டிரெண்ட்டாகி வருகிறது.
இனிமேல் மகேஷ்பாபு படத்தில் நாயகியாக நடிக்க சமந்தாவிற்கு வாய்ப்பில்லை என்று பேச்சுக்கள் ஆந்திர திரையுலகில் நிலவுகிறது. தற்போது தமிழ் திரையுலகில் லிங்குசாமி - சூர்யா படத்தில் நாயகியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago