நடிகர் பவன் கல்யாண் தனது அரசியல் கட்சிக்கு 'ஜன சேனா' என்று பெயரிட்டுள்ளார். 'ஜன சேனா' என்றால் 'மக்கள் படை' என்று அர்த்தம்.
'கபார் சிங்', 'அத்திரண்டிக்கி தாரேதி' உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்தவர் பவன் கல்யாண். 'அத்திரண்டிக்கி தாரேதி' படத்தின் வசூல் இதுவரை வெளிவந்த அனைத்து தெலுங்கு படங்களின் வசூல் சாதனையையும் முறியடித்தது. நடிகர் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சிரஞ்சீவி காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார். பவன் கல்யாணும் அரசியல் கட்சி ஆரம்பிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் பவன் கல்யாண் தனது அரசியல் கட்சிக்கு 'ஜன சேனா' என்று பெயரிட்டுள்ளார். தனது அரசியல் நிலைப்பாடு குறித்து பத்திரிகையாளர்களை 14ம் தேதி சந்திக்கிறார் பவன். அத்தேதியில் வேட்பாளர்களை எல்லாம் அறிவிக்காமல், தனது கட்சி நிலைப்பாட்டை மட்டுமே அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து 2, 3 நாட்களில் வேட்பாளர்களை அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறார் பவன் கல்யாண்.
முக்கிய செய்திகள்
சினிமா
39 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago