இறுதிச்சுற்று ரீமேக்கான குரு பர்ஸ்ட் லுக் வெளியீடு

By ஸ்கிரீனன்

'இறுதிச்சுற்று' தெலுங்கு ரீமேக்கான 'குரு' பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இருக்கிறது படக்குழு.

மாதவன், ரித்திகா, நாசர், ராதாரவி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் சுதா இயக்கத்தில் வெளியான படம் 'இறுதிச்சுற்று'. சசிகாந்த் மற்றும் சி.வி.குமார் இணைந்து தயாரித்திருந்த இப்படத்தை யு.டிவி நிறுவனம் வெளியிட்டது. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இப்படம் வெளியாகும் முன்பே, இதன் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ் நடிக்க சுதா இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. 'பாபு பங்காரம்' படத்தைத் தொடர்ந்து 'இறுதிச்சுற்று' ரீமேக்கிற்கு தனது உடலமைப்பை மாற்றி வந்தார் வெங்கடேஷ்.

இப்படத்துக்கு 'குரு' என பெயரிட்டு இருக்கிறார்கள். சசிகாந்த் தயாரிக்கவிருக்கும் இப்படத்துக்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE