9 நாட்களிலேயே ரூ.1000 கோடி வசூலைத் தாண்டிய படம் என்ற இமாலய சாதனையை 'பாகுபலி 2' படைத்துள்ளது.
இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்போடு, ஏப்ரல் 28-ம் தேதி வெளியான படம் 'பாகுபலி 2'. ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், நாசர், ராணா, தமன்னா நடிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
'பாகுபலி 2' படத்துக்கு இந்திய திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்தை தெரிவித்துள்ளார்கள்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் பெரும் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது 'பாகுபலி 2'.
தற்போது படம் வெளியான 9 நாட்களில் ரூ.1000 கோடி வசூலைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் ரூ.1000 கோடி வசூலித்து சாதனை படைத்த முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது 'பாகுபலி 2'.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago