விரைவில் கபார் சிங் 2!

By செய்திப்பிரிவு

'கபார் சிங்' இரண்டாம் பாகம் படப்பிடிப்பை அடுத்த மாதம் முதல் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

தெலுங்கு திரையுலகில் வசூலை அள்ளிய படங்களில் 'கபார் சிங்' படத்திற்கு முக்கிய இடமுண்டு. இந்தியில் சல்மான்கான் நடிப்பில் வெளிவந்த 'டபாங்' படத்தின் ரீமேக் இது. படம் வசூலை வாரிக் குவித்ததால், படத்தின் இரண்டாம் பாகத்தினை தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

பவன் கல்யாண் நடிப்பில் 'Atharaintiki Daaredi' படம் செப்டம்பர் 27ம் தேதி வெளியாக இருக்கிறது. அதற்கான விளம்பர வேலைகள், ரசிகர்களைச் சந்தித்தல் போன்றவற்றில் பவன் கல்யாண் கலந்து கொள்ள இருப்பதால், இப்படத்தை அடுத்த மாதம் துவங்க முடிவு செய்யப்பட்டது.

'கபார் சிங்' இரண்டாம் பாகத்தின் தலைப்பு என்ன என்பது இன்னும் முடிவாகவில்லை. படத்தின் கதையாசிரியர்களிடம் படத்தில் காமெடி மற்றும் நிறைய பஞ்ச் வசனங்கள் இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் பவன் கல்யாண்.

முதல் பாகத்தினை இயக்கிய ஹரிஷ் சங்கர், இரண்டாம் பாகத்தினை இயக்கவில்லை. சம்பத் நந்தி இயக்க இருக்கிறார். பவன் கல்யாணின் நெருங்கிய நண்பரான சரத் மறர் தயாரிக்கவிருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்