பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள 'அத்தாரின்டிக்கி தாரேதி' திரைப்படம் செப்டம்பர் 26 ஆம் தேதி வெளியாகவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
பவன் கல்யாண், சமந்தா நடிப்பில், திரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க, பி.வி.எஸ்.என் பிரசாத் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை மாதமே நடைபெற்றது. படமும் சுதந்திர தின விடுமுறையை கணக்கில்கொண்டு வெளியிட முடிவு செய்தார்கள். அதற்குள் தெலுங்கானா பிரச்னை ஆரம்பிக்க, படத்தை வெளியிடமால் வைத்திருக்கிறார்கள்.
பெரிய பட்ஜெட் படம் என்பதால்தான் இந்தத் தாமதம். இப்படம் மட்டுமன்றி வேறு பல படங்களையும் தெலுங்கானா பிரச்னையின் எதிரொலியால் வெளியிடாமல் இருக்கிறார்கள்.
'அத்தாரின்டிக்கி தாரேதி' படத்தை ஒரு வழியாக செப்டம்பர் 26 ஆம் தேதி வெளியிடலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள். பவன் கல்யாணும் படம் செப்டம்பர் மாதம் வந்தால் நன்றாக இருக்கும். பல படங்கள் அக்டோபர் வெளியீட்டிற்கு தயாராக இருப்பதால், இம்மாதமே வெளியிடுங்கள் என்று கூறியிருக்கிறார்.
இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், செப்டம்பர் 26 ஆம் தேதி வெளியிட பணிகளை துரிதப்படுத்தியிருக்கிறார்கள். இது சோதனை முய்ற்சியாகவும் கருதப்படுகிறது.
இப்படம் சுமார் 55 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி இருக்கிறது. இப்படத்திற்கு முன்பு தயாரித்த இரண்டு படங்களுமே தயாரிப்பாளருக்கு பெருத்த நஷ்டம் என்பதால், இப்படத்தை நம்பியே இருக்கிறார் தயாரிப்பாளர் பி.வி.எஸ்.என் பிரசாத்.
படமும் அவரது நம்பிக்கையை கெடுக்கவில்லை, வெளியாவதற்கு முன்பே தியேட்டர் உரிமை, டிவி உரிமை, வெளிநாட்டு உரிமை வகையில் 60 கோடி ரூபாயை அள்ளியிருக்கிறார் தயாரிப்பாளர்.
முக்கிய செய்திகள்
சினிமா
46 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
2 days ago
சினிமா
2 days ago
சினிமா
2 days ago
சினிமா
2 days ago
சினிமா
2 days ago