நதியாவை இயக்கிய பவன் கல்யாண்!

By ஸ்கிரீனன்

'அத்திரண்டிக்கி தாரேதி' படத்தில் நதியா சம்பந்தப்பட்ட ஒரு காட்சியினை இயக்கியிருக்கிறார் பவன் கல்யாண்.

'அத்திரண்டிக்கி தாரேதி' படத்தின் வசூல் கண்டிப்பாக 'மஹதீரா' படத்தின் வசூலை முறியடிக்கும் என்று ஆந்திர திரையுலகினர் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வேளையில் அப்படத்தில் நதியா சம்பந்தப்பட்ட ஒரு காட்சியினை பவன் கல்யாண் இயக்கியதாக இயக்குநர் த்ரிவிக்ரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து த்ரிவிக்ரம் “கதையினை பவன் கல்யாணிடம் கூறியவுடனே, அத்தை வேடத்தில் யார் நடிப்பார் என்று கேட்டார். அதற்கு நதியா என்றவுடன் உடனே சம்மதம் தெரிவித்தார். 'மிர்ச்சி' படத்தில் நடிக்கும் முன்பே நான் நதியாவிடம் போனில் முழுக்கதையையும் கூறினேன்.

அவரும் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார். உடனே, நான் படப்பிடிப்பு எல்லாம் முடிவு செய்துவிட்டு, உங்களிடம் தேதிகள் வாங்கிக் கொள்கிறேன் என்று கூறிவிட்டேன்.

நதியாவிற்கு தெலுங்கு உச்சரிப்பு சரியாக வராது. ஒரு காட்சியின் போது அவருடைய வசன உச்சரிப்பைப் பார்த்து என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவரோ இதனை பவன் கல்யாணிடம் கூறிவிட்டார்.

த்ரிவிக்ரம் இல்லாவிட்டால் மட்டுமே இக்காட்சியில் நான் நடிப்பேன் என்று கூறவே, பவன் கல்யாண் என்னை வெளியே அனுப்பிவிட்டார். அவரே அக்காட்சியினை இயக்கி முடித்தவுடன், நான் உள்ளே சென்று பார்த்து, ஒ.கே என்று சொன்னேன்” என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்