தெலுங்கு படத்தில் நாயகியின் அப்பா வேடத்தில் விஜய் சேதுபதி

By செய்திப்பிரிவு

நடிகர் விஜய் சேதுபதி 'உப்பெனா' என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியின் அப்பா வ்வேடத்தில் நடிக்கவுள்ளார்.

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி, இங்கேயே அவ்வபோது வித்தியாசமான கதாபாத்திரங்களில், கவுரவ வேடங்களிலெல்லாம் நடித்து வருகிறார். மலையாளத்தில் நடிகர் ஜெயராமுடன் இணைந்து 'மார்கோனி மத்தாய்' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் சிரஞ்சீவியுடன் 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்தில் நடித்துள்ளார்.

தற்போது தெலுங்கில், நடிகர் சாய் தரம் தேஜ்-ன் சகோதரர் வைஷ்ணவ் தேஜ்-ன் முதல் படமான 'உப்பெனா'வில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். அதிலும் நாயகி கீர்த்தி ஷெட்டியின் அப்பாவாக. மேலும் படத்தின் வில்லனும் விஜய் சேதுபதியே. சாய் தரம் தேஜ், நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் முன்னணி நடிகர் ஒருவர் தெலுங்கில் நாயகியின் அப்பா வேடத்தில் நடிப்பது துறையில் பலரை ஆச்சரியப்படுத்தியுளது. புச்சிபாபு சனா என்பவர் இயக்கும் 'உப்பென்னா' ஒரு காதல் கதை. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்